சுவாமிமலை
சுவாமிநாதசுவாமி.
ஆறுபடை வீடுகளில் ஒன்று. முருகன் குரு ஸ்தானத்தில் இருந்து சிவனுக்கு ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரம் உபதேசம் செய்வதினால், முருகனின் சன்னதி மேலே; ஸ்வாமி மற்றும் அம்பாள் சன்னதி கீழே. அதனாலேயே, ”சிவனுக்கு வாத்தியார்" என்கிற அர்த்தத்தில், சுவாமிநாதசுவாமி என்று பெயர். இங்கு முருகனின் வாகனம் யானை, மயில் அல்ல.
பத்மாவுக்கு எங்கோ படித்தது ஞாபகம் வந்திருந்து குருக்களிடம் கேட்டாள் “சிவனின் இடுப்பில் அமர்ந்து முருகன் சிவனின் காதில் உபதேசம் செய்வதாகச் சிற்பம் எங்கிருக்கிறது?” என்று. குருக்களும் வெளியே படி இறங்கும் இடத்தில் இருப்பதாகக் கூறினார். சென்று பார்த்தோம். மிகவும் அழகான சிற்பம். வெறும் மூலஸ்தானத்தை மட்டும் பார்த்துவிட்டு வராமல், இதையும் கண்டிப்பாகப் பாருங்கள்.
இதற்கு மேல் சுவாமிமலையில் படி ஏறி கோயிலுக்குச் செல்வது exercise என்பது கூடுதல் போனஸ்.
கீழே இருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். முருகன் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து கொண்டிருந்தாலும், ஒரு “கெத்தோடு” இருப்பதாகத் தோணவில்லை?
