முன்னுரை
மாற்றம் ஒன்றுதான் நிலையானது!
எங்கள் இருவருடைய கடவுள் நம்பிக்கை வழக்கத்தினால் மட்டுமே வந்ததும் அல்ல, செய்யாமல் விட்டால் “சாமி கண்ணை குத்திடுமோ” என்ற அச்சமுமில்லை. காலப்போக்கில் எங்கள் அனுபவங்களால் உருவானது. நாளையே இதுவும் மாற வாய்ப்புள்ளது!
எங்கள் அனுபவங்களைத் தொகுத்து ஒரு பயணக் கட்டுரை எழுதலாம் என்று முடிவு செய்தோம்.
முதலில் நான் பயணக் கட்டுரை எழுதலாம் என்று யோசிக்க ஆரம்பித்தபோது, என் மனசுல நிறைய கேள்விகள். எந்த பாஷையில் எழுதலாம், யார் டார்கெட் ஆடியன்ஸ் என்றெல்லாம் சிந்தனைகள். நான் படித்தது தமிழ் மீடியம் பள்ளியில்தான் என்றாலும், கல்லூரியிலிருந்து ஆங்கில வழிக் கல்விதான். ஆங்கிலத்தில் எழுதினால் ‘ரீச்’ நிச்சயமாகப் பெரிதுதான். ஆனாலும் தமிழில் எழுத ஆசையாக இருந்ததாலும், நம்முடைய சிந்தனைகள் எல்லாம் நம் தாய்மொழியில் நன்றாக வெளிப்படும் என்று தோன்றியதாலும், தமிழில் எழுதத் தொடங்கிவிட்டேன்.
தமிழில் எழுதுவது என்று முடிவு செய்த பின், கூடுமானவரை தூய தமிழில் எழுத வேண்டுமா அல்லது நடைமுறையில் பேசப்படுகின்ற ஆங்கிலம் கலந்த தமிழில் எழுத வேண்டுமா என்று ஒரு கேள்வி எழுந்தது. இதில் என் மனதில் வெற்றி பெற்றது இரண்டாவது சிந்தனைதான். மூன்று காரணங்கள்; ஒன்று, என் தூய தமிழில் எனக்கே பெரிய நம்பிக்கை இல்லை. “நாதா, வந்தியத்தேவன் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்” என்றெல்லாம் எழுத முயற்சித்தால் என்ன ஆகும்? இரண்டாவது, பேசுகிற தமிழில் எழுதினால் எல்லாருக்கும் போய்ச் சேருவதற்கு சுலபமாக இருக்கும். மூன்றாவது, தமிழை “diglossic” என்று சொல்வார்கள். அதாவது, பேசுவதும் எழுதுவதும் இரண்டு மொழிகள் மாதிரி வித்யாசப்பட்டிருக்கிறது . (courtesy, Padma, M.A. Fieldwork). அதனால்தானோ, தமிழைத் தாய் மொழியாய்க் கொண்ட பள்ளி பசங்க நிறைய பேர், தமிழில் அவ்வளவாகத் தேர்ச்சியோ அல்லது தமிழின் மீது ஆவலோ கொண்டிருப்பதில்லை. அதனால் ஒரு நடு நிலையாக “தினத்தந்தி” நாளிதழ் ஸ்டைலில் எனக்குச் சௌகரியமான தமிழைத் தேர்ந்தெடுத்தேன். எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மிக்ஸிங் தமிழ் அண்ட் English ஸ்டைலுக்கு ஒரு பெரிய fan. எனவே..
கீழே இருப்பது தமிழ் என்று யாராவது சொன்னால்தான் தெரியும்:

இது சற்றே சமீபத்திய தமிழ். எனக்கு சரிவர படிக்கத் தெரியவில்லை, நான் பள்ளியில் முழுக்க முழுக்க தமிழில் படித்திருந்தபோதிலும்:

இப்பொழுது “லை” என்று எழுதுகிறார்கள். என்னுடைய சிறு வயதில் இதைக் கீழே காணும் விதத்தில்தான் எழுதினோம்:

இந்த பயணக் கட்டுரையைத் தொகுத்து எழுதிய போது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எழுத எழுத, எழுதுவது இன்னும் ஒரு பிரயாணமாக உருமாறியது; இது எங்கள் இருவருக்கும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக ஆகியது. எழுத ஆரம்பித்தவுடன் எங்களுடைய அனுபவங்களில் நாங்களே மூன்றாவது மனிதர்களாகப் பயணித்தோம்.
நாங்க ரெண்டு பேரும் “நாட் தி செவ்வாய்க்கிழமை கோயில் போற டைப்ஸ்”; “நார் தி கோயிலே வேண்டாம் டைப்” - ஒரு comfortable மிட் வே - இரண்டுங்கெட்டான் - கோயிலுக்குப் போவதற்கு இன்சென்டிவ் பிரசாதம், லாங் டிரைவ் போன்றவைதான் - ரொம்ப rationalise பண்ணாம ஒரு ஜாலி தான். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால, என் அக்கா சந்திரா, அத்திம்பேர் விஜூ ஆகியோருடன் மாயவரம் சென்று ஒரு நண்பர் வீட்டில் தங்கி, அவருடைய வீட்டாருடன் நிறைய கோயில்கள் சென்றது பசுமையாக நினைவில் நிற்கிறது. எங்களுக்கு அது ரொம்ப ஒரு surprise ஆன ஒன்று; மொதல்ல ஒரு ஜாலி மூட்ல மாயவரம் ட்ரிப் போக ஒத்துக்கிட்டோம்; ஒரு வேளை இவ்வளவு கோயிலுக்குப் போவோம்னு தெரிஞ்சு இருந்தா போயிருப்போமா என்பது கொஞ்சம் டவுட் தான். எங்களுடைய சிறு வயதில் ஏதோ வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் கோயிலுக்குச் செல்வோம்.
ஆனால், இந்தப் பிரயாணம் ஒரு ரொம்ப வித்தியாசமான மறக்க முடியாத experience; கிராமத்தோட நிதானம், சாப்பாட்டு ருசி, திண்ணையில் அரட்டை, சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்த தாத்தா பாட்டிகள், விடியற்காலை வயலின் கிளாஸ் எடுக்க சைக்கிளில் வந்த வயதான வயலின் மாஸ்டர், இப்படிச் சின்னச் சின்ன surprises and wow moments அந்த ட்ரிப் முழுவதும்; கண்ணுக்கு இதமான பச்சை, ஒரு மண் வாசனை, அவ்வளவு நெரிசல் இல்லாத சாலைகள்னு சட்டென்று ஒரு மாறுபட்ட சூழலில் இருப்பதை உணர்கிறோம். இது எல்லாத்துலயும் ஹைலைட்டுன்னு சொல்லணும்னா அது அந்த வீட்ல இருந்த காலேஜ் வயசு பசங்கதான். எங்களுக்கு ஒவ்வொரு கோயிலின் ஹிஸ்டரி மற்றும் அதோட பெருமைகளைச் சொன்ன விதம் - எங்களுக்குள் ஓர் ஆழமான விதையை விதைத்துவிட்டது. அட! இவ்வளவு இருக்கா இதுல? இதுக்கு முன்னாடி யாராவது ஒரு நாளைக்கு இருவது கோயில் போலாம்னு சொல்லியிருந்தாங்கன்னா எங்களுக்கு அதுல எவ்வளவு உடன்பாடு இருந்திருக்கும் என்று தெரியலை!
பழையன எல்லாவற்றையும் ரொமாண்டிசைஸ் பண்ண வேண்டியதில்லை என்று சொன்னாலும், கல்லிலும் எழுத்திலும் இவ்வளவு பொக்கிஷங்கள்! இதன் மதிப்பை உணராமல் இருந்தோமே!
சரித்திரம் என்றால் உலகத்தவர் பண்டைய ரோம் நகரத்தைப் பற்றியோ அல்லது கிரேக்க நாட்டைப் பற்றியோ பேசுகிறார்கள். இந்தியாவிலும் அதற்கு நிகராக ஒரு கலாசார பொக்கிஷம் உள்ளது என்பது மிகையானது அல்ல. கல்லும் மண்ணும் நம்மிடம் ஆயிரம் பழங்கதைகளையும் செய்திகளையும் சொல்லத் தயாராக இருக்கின்றன; கேட்கும் மனநிலை நம்மிடம் இருந்தால்!
கீழே காணப்படுகிற ஓவியம் நம்முடைய தஞ்சைக் கோயிலில் உள்ளது. இதைப் பற்றிய கதையைத் தேடி தெரிந்து கொள்ளப் பாருங்களேன்:

எங்கள் பயணக் கட்டுரையைப் படித்துவிட்டு, யாரோ ஒருவருக்கேனும், உடனே பெட்டியைத் தூக்க ஆவல் வந்தால், அதுவே எங்கள் எழுத்தின் வெற்றி.
நாங்கள் இந்தப் பயணக் கட்டுரையைப் பாதி சேர்ந்தும் பாதி சேராமலும் ஆயிரம் arguments ஓட எழுதினோம்; சின்னதோ பெரிசோ - It’s always an argument. Then we stumbled upon this article on Facebook and it left us wondering if such things could actually happen. ‘பெர்லின் ஆர்ட் பாரசைட்’ என்கிற ‘வெப்சைட்டை’ போய்ப் பாருங்கள். அதில் ஒரு தம்பதி இருபது வருடங்களாகச் சேர்ந்திருந்து ஓவியம் வரைகிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் இரண்டு பேரும் ஒரே ஓவியத்தைச் சேர்ந்து உருவாக்குகிறார்கள். ஒருவரின் கைவேலை முடிவடையும் தருணத்தில், மற்றவர் அதைத் தொடர்கிறார். எவ்வளவு தூரம் அவர்களுக்குள் ‘கோ-ஆர்டினேஷன்’ இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
It’s because they don’t see the difference themselves – the hand of one is the hand of the other.
Photo courtesy: Berlin ArtParasites,

மற்ற கணவன் - மனைவி போல, நாங்கள் நிறைய விஷயங்களில் ஒத்துப்போவோம்; சில விஷயங்களில் சண்டை போடுவோம். இந்தப் பயணக் கட்டுரையைப் பப்ளிஷ் பண்ணுவதற்கு முன் எத்தனை முறை சரி பார்ப்பது என்பதில் பத்மாவுக்கும் எனக்கும் சண்டையே வந்துவிட்டது. எனக்கோ சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த பயண அனுபவத்தில் பிரயாணிக்கலாம் என்று ஆசை. பத்மாவோ அதை முடிப்பதற்கு அவசரம் காட்டாமல் இருந்தாள். ‘சக்ராடா பாமிலிய’ என்கிற ஸ்பெயின் நாட்டு தேவாலயத்தைக் கட்டிய ‘அந்தோனி கவுடி’ கதை அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். “கவுடி இந்த தேவாலயத்தை முடிக்காமல் நீண்ட நாட்களாக கட்டிக்கொண்டிருக்கிறார்” என்று அங்கிருந்த மக்கள் புகார் செய்தார்களாம். அதற்கு அவர் சொன்னாராம், “என் ‘வாடிக்கையாளருக்கு’ ஓர் அவசரமும் இல்லை”. இந்நாள் வரை அந்த தேவாலயம் கட்டிய பாடில்லை!
Bhaskar quotes this example many times – another of his ‘dad’ things – loves to repeat. 🙂