‘ஹோம் ஸ்வீட் ஹோம்’
இந்தக் குறுகிய காலச் சுற்றுப் பயணம் முடிந்து ஊர் திரும்பினோம். மீண்டும் பஸ்ஸில் பயணம். ஆனால் இந்த முறை குளிர் சாதனம் இருந்த ‘பஸ்’. சௌகரியமான படுக்கை வசதி கொண்ட வாகனம்.
‘ஜம்’ என்று கண்ணயர்ந்து மீண்டும் விழித்துக் கொண்ட போது, சென்னை கோயம்பேடு வந்தாகி விட்டது.
இனிமேல் பிரயாணம் என்றால் இந்த மாதிரி பஸ்ஸில் அல்லது “ப்ளெஷரில்” தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டோம்.
‘உபெர்’ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

நாங்கள் இருப்பதோ ‘தரையும் கூரையும் நமக்கு சொந்தமில்லாத’ அபார்ட்மெண்டில் தான். எங்கள் வீடு இது போல் இருந்திருக்கலாம் என்று கற்பனை செய்ததன் வினை!